—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தப்பிக்க முயன்ற கைதிக்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவு!

தப்பிக்க முயன்ற கைதிக்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவு!

பல்லேகெலவிலுள்ள தும்பறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் சிறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொ**ல்லப்பட்டார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான செனக பல்லேதென்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்,

குறித்த கைதி சிறைச்சாலைச் சுவருக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைக்குள் ஏறி, அங்கு பணியில் இருந்த சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.

இதன்போது தப்பிக்க முயன்ற கைதி மீது சிறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக உ**யிரிழந்த குறித்த கைதி, தும்பறை சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.