—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஈரான் ஜனாதிபதி ரஷ்யாவிற்குப் பயணம்

ஈரான் ஜனாதிபதி ரஷ்யாவிற்குப் பயணம்

எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (GECF) எட்டாவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ரஷ்யாவைச் சென்றடைந்துள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், மாநாட்டில் உரையாற்றுவதுடன், அதில் பங்கேற்கும் ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில், மொஸ்கோவில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லேவ்ரோவின் ஈரான் விஜயத்தின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GECF அமைப்பில் ஈரான், ரஷ்யா, கட்டார் மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.