—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

உணவகங்களில் அதிரடி சோதனை: பலர் சிக்கினர்

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரில் உள்ள உணவகங்கள், விடுதிகள் மற்றும் காய்கறிக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் இன்று (31) பொது சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஹட்டன் - டிக்கோயா நகர சபை மற்றும் கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) இணைந்து இந்த விசேட சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, நகரில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், காய்கறிக் கடைகள் மற்றும் பலகாரக் கடைகள் பரிசோதிக்கப்பட்டதுடன், நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற முறையில் பேணப்பட்ட வளாகங்கள் மற்றும் லேபிள் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

சுகாதார விதிமுறைகள் மற்றும் உணவுச் சட்டத்தை மீறி, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஹட்டன் நகருக்கு வருகை தரும் பெருந்திரளான மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பாதுகாப்பான உணவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த விசேட சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.