—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

யானைக்காக வெடிப் பொறி: 3.1 இலட்சம் அபராதம்

யானைக்காக வெடிப் பொறி: 3.1 இலட்சம் அபராதம்

காட்டு யானையைக் கொல்லும் நோக்கில் சட்டவிரோதமாக வெடிப் பொறி அமைத்தமை மற்றும் உரிமமின்றித் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றம் 310,000 ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கஹட்டகஸ்திகிலிய வனவிலங்கு பீட் அலுவலகத்தின் கள உதவியாளர் எம்.ஏ.கே.எஸ். திசாநாயக்க தலைமையிலான வனவிலங்கு அதிகாரிகள் குழு, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொகெபே வனப்பகுதியின் எல்லையில் அக்டோபர் 24ஆம் திகதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் எல்லையில் காட்டு யானையைக் குறிவைத்து அமைக்கப்பட்டிருந்த வெடிப் பொறித் துப்பாக்கியை அதிகாரிகள் கண்டுபிடித்துக் கைப்பற்றியதுடன், சந்தேகநபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும் அக்டோபர் 25ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை (30) சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழக்கை விசாரித்த நீதவான் அவருக்கு 310,000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

வனவிலங்குகள் மீதான குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், கஹட்டகஸ்திகிலிய வனவிலங்கு எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.