—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பின்னோக்கி நகர்ந்த லொறி: பேருந்துடன் மோதல்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொபாஸ் தோட்டப் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்ததால், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி பிற்பகல் சுமார் 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்கலன் லொறி, ஆபத்தான பெரிய வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்ததால், பின்னால் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இடம்பெற்ற விதம், பின்னால் வந்த வாகனமொன்றின் டாஷ் கெமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது.

ஆபத்தான வளைவுகள் நிறைந்த இந்த வீதியில் பாரிய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் வாகனங்களைச் செலுத்த வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.