—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

எரிவாயு கப்பல் வருகை

எரிவாயு கப்பல் வருகை

நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘FRANCOIS’ கப்பல் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்ததுடன், அதிலுள்ள எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிய நான்காவது கப்பலான ‘CORINTHIAN’ எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைத்ததும், நாடு முழுவதும் விநியோகம் சீரமைக்கப்பட்டு, சந்தைக்கு எவ்விதத் தடையுமின்றி வழக்கம்போல் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு உறுதியளித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.