ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

மாத்தளை, உக்குவெலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்குவெலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.