—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வெளிநாடுகளில் தலைமறைவான 236 பேர்!

வெளிநாடுகளில் தலைமறைவான 236 பேர்!

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேசப் பொலிஸாரின் வழிகாட்டல்கள் மற்றும் இரகசியத் தன்மையைப் பேண வேண்டியதன் காரணமாக, சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்கள் தங்கியுள்ள நாடுகள் தொடர்பான விவரங்களையோ பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

1977ஆம் ஆண்டின் 08ஆம் இலக்கக் கைதிகள் பரிமாற்றச் சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றக் குழுக்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற மனிதப் படுகொ**லைகள் தொடர்பான தரவுகளையும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி, 2020ஆம் ஆண்டில் 2 படுகொ**லைகளும், 2021ஆம் ஆண்டில் 4 படுகொ**லைகளும், 2022ஆம் ஆண்டில் 23 படுகொ**லைகளும், 2023ஆம் ஆண்டில் 16 படுகொ**லைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், 2024ஆம் ஆண்டில் 42 படுகொ**லைகளும், 2025ஆம் ஆண்டில் 29 படுகொ**லைகளும், 2026ஆம் ஆண்டில் 18 படுகொ**லைகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, கடந்த சில ஆண்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களினால் மொத்தம் 136 மனிதப் படுகொ**லைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் சுட்டிக்காட்டினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.