—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வெளியேற்றப்படும் பெருமளவு நீர்; அவதானம்!

வெளியேற்றப்படும் பெருமளவு நீர்; அவதானம்!

நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் தொடர்ந்து திறந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான்கதவுகளில் 8 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செக்கனுக்கு 7,884 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அதன் ஒரு வான்கதவு தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் இன்று (22) வியாழக்கிழமை அதிகாலை வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் ஒரு வான்கதவு அதிகாலையில் தானாகவே மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.