—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வீட்டுத்திட்டப் பணம் இடைநிறுத்தம்; மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வீட்டுத்திட்டப் பணம் இடைநிறுத்தம்; மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான மிகுதிக் கொடுப்பனவை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக வீட்டுத்திட்டப் பயனாளிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

இதற்கான ஆரம்பக் கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பணம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமக்கான மிகுதிக் கொடுப்பனவை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தி டித்வா வீட்டுத்திட்டப் பயனாளிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பருவமழை ஆரம்பித்துள்ளதால், சிலர் தாங்கள் வாழ்ந்த தற்காலிக வீடுகளையும் இடித்துவிட்ட நிலையில், நிரந்தர வீடுகளும் இன்றி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தமக்கான மிகுதிக் கொடுப்பனவை உடனடியாக விடுவிக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவை எதிர்வரும் வாரத்தில் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.