ஒரே விபத்தில் நான்கு வாகனங்கள்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதியுள்ளது.
இதன்போது, குறித்த இரண்டு முச்சக்கரவண்டிகளும் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. அவற்றில் ஒரு முச்சக்கரவண்டி, லொறியின் பின்புறத்திலும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், மற்றுமொரு முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த 21 வயதுடைய யுவதியும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.