—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கட்டுக்கரை குளத்தில் நீர் விநியோகம் ஆரம்பம்

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கையை முன்னிட்டு, முதல் கட்ட நீர் விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாயக் குழுக் கூட்டத் தீர்மானங்களுக்கு அமைய, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இம்முறை மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, முதல் கட்ட நீர் விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (23) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் அனைவரும் மூன்றிலிருந்து மூன்றரை மாதங்களுக்குள் பலன் தரக்கூடிய குறுகிய கால நெல் இனங்களைப் பயிரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.