கஜமுத்து விற்பனை முயற்சி: இருவர் கைது

குருநாகல், படகமுவ வனப்பகுதிக்கு அருகில் வைத்து, கஜமுத்தை 8 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாண வனஜீவராசிகள் விசேட சோதனைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராம மற்றும் ரம்புக்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.
இவர்கள் இருவரும் இப்பாகமுவ பகுதியில் உள்ள விலங்குப் பண்ணையொன்றின் முகாமையாளர்களாகப் பணியாற்றி வருவதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று புதன்கிழமை (28) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.