ஹோட்டல் உரிமையாளர் கொ**லை: சாரதி சிக்கினார்

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் உரிமையாளரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொ**லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி, போ**தைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் உரிமையாளரை, காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கியால் சுட்டுக் கொ**லை செய்ததுடன், பெண் ஒருவரையும் காயப்படுத்திய சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் சாரதியாகச் செயற்பட்ட சந்தேகநபர், 6 கிராம் ஐஸ் போ**தைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (28) லுனாவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களனி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.