—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கோடாவுடன் 42 வயதுடையவர் கைது

கோடாவுடன் 42 வயதுடையவர் கைது

தங்கொட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தழுவெல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தங்கொட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 1,012 லீற்றர் கோடா (5 பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தழுவெல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.