கடற்கரையில் மாணவன் ச**டலமாக மீட்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் ச**டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹொரண பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 16 வயது மாணவர் ஒருவரின் ச**டலம் மொரட்டுவ, மாதங்காவத்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
ஹொரண பிரதேசத்தின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்ற மியுரு நிம்சர என்ற மாணவரே இவ்வாறு உ**யிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி ஹொரண பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காகச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற மாணவன், மீண்டும் வீடு திரும்பவில்லை எனப் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், கடற்கரையில் சடலமொன்று கிடப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குப் பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவனின் மரணம் தொடர்பிலோ அல்லது மரணத்திற்கான காரணம் தொடர்பிலோ இதுவரையில் பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

Comments 0
Be the first to comment.