மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னந்தோப்பில் மின்கம்பியைச் சீரமைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி அவர் உ**யிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.