—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கடலில் மறைத்த வலைகள் மீட்பு

கடலில் மறைத்த வலைகள் மீட்பு

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு எல்லைக் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலுக்குள் அமிழ்த்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தொகுதி சுருக்கு வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (20) குறித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வலைகள் நேற்று மாலை கடற்றொழில் பரிசோதகர் கி. ஜெகதர்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாளை வியாழக்கிழமை (22) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வாகரை, வாழைச்சேனை, களுவன்கேணி உள்ளிட்ட கடற்பரப்புகளில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பணிகளில் ஈடுபடும் கடற்றொழில் உத்தியோகத்தர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாகச் சிலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.