சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார, எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுகீஸ்வர பண்டாரவின் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக, இன்று (21) கோட்டை நீதவான் பசன் அமரசேன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகீஸ்வர பண்டாரவின் மனைவியின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஏனைய கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளின் பிரதானிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments 0
Be the first to comment.