—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கனமழையால் மஸ்கெலியா வீதியில் மண் சரிவு

கனமழையால் மஸ்கெலியா வீதியில் மண் சரிவு

இன்று (04) மதியம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியின் சின்ன சோலங்கந்தை பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மஸ்கெலியா பிரதேச சபையின் குறித்த வட்டாரத்திற்குப் பொறுப்பான உறுப்பினர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மண் சரிவைப் பார்வையிட்டதுடன், சரிந்து விழுந்த மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

மண் சரிவு காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், குறித்த பகுதியில் சரிந்து விழுந்த மண்ணை அகற்றுவதற்காக டோசர் இயந்திரத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

அத்துடன், அப்பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து வீதியில் சரிந்து விழுந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக வட்டார உறுப்பினர் இளங்கோவன் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.