—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கரவெட்டி மாணவன் தேசியச் சாதனை

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடத்திய 2026ஆம் ஆண்டுக்கான தேசியமட்டத் தனிநபர் சதுரங்கப் போட்டியில் 5 வெற்றிகளைக் குவித்து, சர்வதேசப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுக்குத் தெரிவாகி, யாழ்ப்பாணம் வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த சிறுவன் நிசாந்தன் ஆஜீத் அபார சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தேசியமட்டச் சதுரங்கப் போட்டிகள் கடந்த 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இறுதிச்சுற்றில், 6 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் நிசாந்தன் ஆஜீத், மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.

நடைபெற்ற மொத்தம் 7 சுற்றுகளில் 5 சுற்றுகளில் அபார வெற்றியீட்டி, ‘மெரிட்’ பட்டியலில் இடம்பிடித்தார்.

இதன் மூலம் எதிர்வரும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் தனதாக்கிக் கொண்டார்.

செல்வன் பெனியல் மற்றும் செல்வன் ஆற்றலன் ஆகியோரின் திறமையான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழேயே நிசாந்தன் ஆஜீத் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே தேசியமட்டத்தில் சாதனை படைத்து, சர்வதேசத் தகுதிகாண் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள மாணவன் நிசாந்தன் ஆஜீத்தைப் பாடசாலைச் சமூகத்தினரும், சதுரங்க வீரர்களும், பிரதேச மக்களும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.