யாழ். வீராங்கனைக்கு சர்வதேச விருது

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாகப் பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன் டிலக்சனா, ‘சிறந்த ரைடர்’ விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் இலங்கை மகளிர் அணி பங்கேற்ற லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு அபார வெற்றியைப் பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இலங்கை மகளிர் அணி 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்காகக் களத்தில் மிகச் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா, போட்டியின் சிறந்த ‘ரைடர்’ விருதைத் தனதாக்கிக் கொண்டார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் வடபிராந்திய வீராங்கனை ஒருவர் இத்தகைய சாதனையைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.