—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

களனி ஆற்றின் தாழ்நில பகுதிகளுக்கு எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால், நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால், இன்று புதன்கிழமை (21) காலை முதல் நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வான் மேவிப் பாய்ந்து வருகின்றது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கேசல்கமு மற்றும் களனி ஆறுகளின் நீர்மட்டங்களும் ஓரளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், ஆற்றைப் பயன்படுத்தும் நபர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.