கவந்தீச யானை நினைவேந்தல்
இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உ**யிரிழந்த ‘கவந்தீச’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று (25) அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நடைபெற்றது.
அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
ஊடகவியலாளர் சுசந்த அமரபந்து அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் செல்வி யமுனா கொனாரா நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.
நிகழ்வின்போது, உ**யிரிழந்த கவந்தீச யானையின் நினைவாக மதக் கிரியைகள் இடம்பெற்றதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பாகவும் விசேட கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

Comments 0
Be the first to comment.