—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

யானை தாக்கி ஒருவர் ப**லி

யானை தாக்கி ஒருவர் ப**லி

குருணாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உ**யிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இதில் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உ**யிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டின் பின்புறத்தில் தங்கியிருந்தபோது எதிர்பாராத விதமாகக் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உ**யிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.