—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காட்டு யானை தாக்கி முதியவர் ப**லி

காட்டு யானை தாக்கி முதியவர் ப**லி

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் உ**யிரிழந்துள்ளார்.

நேற்று (1) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த கே. பியசேன என்பவரே உ**யிரிழந்துள்ளார்.

உ**யிரிழந்தவர் அப்பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றில் கல் உடைக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அலஹேனா, மடவலலந்தா உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக ஒற்றைக் காட்டு யானையொன்று தொடர்ச்சியாகச் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்திருந்த நிலையில், தற்போது இந்த உ**யிரிழப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உ**யிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒற்றைக் காட்டு யானையை உடனடியாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.