—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (01) ஆரம்பகட்ட ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கான ஆரம்ப நிகழ்வும், விசேட கலந்துரையாடலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்தல் மற்றும் துயிலும் இல்லப் பகுதிகளைச் சீரமைத்தல் தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு ஆரம்பகட்டப் பணிகளையும் கலந்துரையாடல்களையும் தொடக்கி வைத்தார்.

அவருடன் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, துயிலும் இல்ல வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துதல், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கான உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.