குடும்பப் பெண் கொடூரத் தாக்குதலில் ப**லி!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொ**லை செய்யப்பட்ட நிலையில், 41 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரின் ச**டலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே உ**யிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்போது, உ**யிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உ**யிரிழந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தபோது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் அவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
படுகொ**லை செய்யப்பட்ட பெண்ணின் ச**டலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் யார், கொ**லைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.