—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

18 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து!

18 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து!

கென்யாவின் தலைநகரான நைரோபியில் 18 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று நேற்று (23) வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

நைரோபி நகரில் அமைந்திருந்த குறித்த 18 மாடிக் கட்டிடமே இவ்வாறு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நோக்கில் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ச்சியாகத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், இந்த விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை மற்றும் உ**யிரிழப்புகள் தொடர்பான துல்லியமான விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.