—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கொக்குவில் துயரத்தின் 39ஆம் ஆண்டு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் உ**யிரிழந்தவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

படுகொ**லையில் உ**யிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய இராணுவத்திற்கும், வி.த.பு இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தின் பரவலான விமானக் குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களுக்குப் பயந்து, கொக்குவில் மற்றும் ஆனைக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த பல பொதுமக்கள் பாதுகாப்புத் தேடி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி, காங்கேசன்துறை வீதி வழியாக யாழ். நகரை நோக்கிக் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளுடன் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்தனர்.

இதன்போது, கவச வாகனங்களிலிருந்து பாடசாலைக் கட்டடங்கள் மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தக் கட்டடங்களில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதன் காரணமாக, பாடசாலை வகுப்பறைகளில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்தனர்.

உ**யிரிழந்தவர்களின் ச**டலங்களை உரிய முறையில் தகனம் செய்வதற்கான சூழ்நிலை இல்லாததால், அவர்களின் உடல்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.