—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

குருதிக்கொடை வழங்கிய பொதுமக்கள்

திருகோணமலை மெதடிஸ்த திருஅவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட குருதிக்கொடை முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் குருதிக்கொடை முகாமில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு குருதியைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் சேகர மெதடிஸ்த திருச்சபைகளின் குருமார்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டதுடன், திருச்சபை மக்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று குருதிக்கொடைகளை வழங்கினர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.