—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

குருநாகலில் அரசுக்கு ஆதரவாகப் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் குருநாகலில் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்துவதுடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளை எவ்வித தயக்கமுமின்றித் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாப்பதே இந்தப் பேரணியின் பிரதான நோக்கமாகும்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.