குளத்தில் தந்தை சடலமாக மீட்பு
ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன், வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த சில காலமாகக் கடையொன்றை நடத்தி வந்துள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குளக்கரையிலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் பாதணிகள், பணப்பை மற்றும் குடை ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.