—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் மாணவன் சாதனை!

பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் மாணவன் சாதனை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ஏழாவது தமிழியல் ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் பேச்சாற்றல் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்புப் பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியில் பங்கேற்ற ஜெரோம் ஜொய்சன், தனது பேச்சாற்றல் திறனை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் தனது கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.