தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர் நீதிமன்றில் ஆஜர்

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், வழக்கு விசாரணைகளுக்காக இன்று (29) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் – மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளவராவார்.
கடந்த 26ஆம் திகதி தமிழகத்திலிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார், கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
அதன் பின்னர், திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது தாயகம் திரும்பியிருந்தார்.

Comments 0
Be the first to comment.