சலே மனுவில் இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் இடையீட்டுக் கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Comments 0
Be the first to comment.