—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நீதிக்காக இளைஞர்கள் போராட்டம்

நீதிக்காக இளைஞர்கள் போராட்டம்

நாட்டின் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (21) அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘நியூ விங்ஸ்’ (New Wings – அலுத் பியபத்) அமைப்பும் பல இளைஞர் அமைப்புகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

“வெள்ளையில் உடை அணிந்து, கறுப்பில் வருகை தருதல்” என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

மக்களின் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் இரட்டைத் தரநிலைகளைப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஊழல், இனவாதம், மத தீவிரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், ஊழல் நிறைந்த பழைய அரசியல் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்குவது தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர் செயற்பாட்டாளர்கள் வீதி நாடகமொன்றை அரங்கேற்றினர். அத்துடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.