—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சாரதிகளுக்கு திடீர் போ**தைப்பொருள் பரிசோதனை

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் சாரதிகளை இலக்காகக் கொண்டு இன்று (29.10.2026) திடீர் போ**தைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

போ**தைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்துவோரைக் கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் போ**தைப்பொருள் பாவனையின்றிப் பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்போது, மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், தனியார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

போ**தைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.