—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வீட்டில் இளைஞர் ச**டலமாக மீட்பு

வீட்டில் இளைஞர் ச**டலமாக மீட்பு

வட்டவளை, லொனக் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் உ**யிரிழந்த சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலை 9.30 மணியளவில், லொனக் பகுதியில் உள்ள தனது வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உ**யிரிழந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ**யிரிழந்தவர் ரஞ்சித்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது வயது தொடர்பில் தகவல்களில் முரண்பாடு காணப்படுகிறது. தற்கொ**லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை நோட்டன் தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் பொலிஸார் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், ச**டலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.