—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சிறிவிமல நாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

சிறிவிமல நாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயகரும், கண்டி கெடம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதியுமான கெப்பெட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கண்டி கெடம்பே ராஜோபவனாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தேரரின் மறைவால் துயரடைந்த மகா சங்கத்தினருக்கும் விகாரையின் பரிபாலன சபையினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநரும் விசேட வைத்திய நிபுணருமான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.