—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

100 ரூபாய் இலஞ்சம்: அதிகாரி கைது

100 ரூபாய் இலஞ்சம்: அதிகாரி கைது

100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில், ரத்தோலுகம பேருந்து நிலையத்திலுள்ள நேரக் கண்காணிப்பாளரின் அறையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

188ஆம் இலக்க வீதியில் ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் பேருந்து ஒன்றின் பயணத்தை உரிய நேரத்தில் ஆரம்பிக்காமல் தாமதமாகத் தொடங்குவதற்கும், சாதகமான முறையில் பயணத்தை ஆரம்பிக்க அனுமதிப்பதற்கும், குறித்த பேருந்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து சந்தேகநபர் 100 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.