—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

டெங்கு நோயால் 79 பேர் உ**யிரிழப்பு

டெங்கு நோயால் 79 பேர் உ**யிரிழப்பு

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 105,097 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 79 மரணங்களும் சம்பவித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள 28 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவல் அதிகமுள்ள அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் மொத்த டெங்கு தொற்றாளர்களில் 52.02 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இங்கு இதுவரை 54,673 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 22,053 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 20,384 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 8,378 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 4,377 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டில் டெங்கு நோயின் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

டெங்கு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும், நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.