—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ட்ரம்ப் ஆட்சி குறித்து கடும் விமர்சனம்

ட்ரம்ப் ஆட்சி குறித்து கடும் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொடுங்கோலனைப் போல ஆட்சி நடத்தி வருவதாக முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளமை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ், ட்ரம்பின் ஆட்சியை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள், பொருளாதார நிலை, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய கமலா ஹாரிஸ், “மிகவும் சக்திவாய்ந்தவர்களாகத் தோன்றும் சிலர் திறமையற்றவர்கள் என்பது அம்பலமாகியுள்ளது. மக்கள் தங்கள் மனதில் உள்ள கோபத்தை வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.