—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

லூலாவின் வரலாற்று வெற்றி

லூலாவின் வரலாற்று வெற்றி

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நான்காவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகளையும் முதலாவது கட்டத் தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றி, 80 வயதான லூலா டா சில்வா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

1980களில் பிரேசிலில் ஜனநாயகம் மீண்டும் திரும்பிய பின்னர், முதலாம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து, இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் முதல் தலைவராக லூலா மாறியுள்ளார்.

லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றி அலை வீசி வந்த நிலையில், லூலாவின் இந்த வெற்றி அப்பிராந்தியத்தில் முக்கிய அரசியல் சமநிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், போல்சனாரோ குடும்பத்துக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுத்துறை பிரசாரம் செய்தபோதிலும், அந்த முயற்சியை முறியடித்து லூலா வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும், லூலாவின் நான்காவது ஆட்சிக்காலம் கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதால், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சி நிர்வாகத்திலும் அவர் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

அத்துடன், நாட்டின் அதிகரித்து வரும் கடன் சுமை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 சதவீதத்துக்கும் மேல்) மற்றும் 2.3 சதவீதமாக எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆகியவையும் லூலாவின் புதிய ஆட்சிக்காலத்தில் முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.