திருகோணமலையில் விடுதியில் கொ**லை

திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் குழுவொன்றினால் படுகொ**லை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், குறித்த நபர் கழுத்தறுத்துக் கொ**லை செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் அல்லது குழுவினர் இந்தப் படுகொ**லையைச் செய்திருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகொ**லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.