திருகோணமலையில் வெள்ளம்

கனமழை காரணமாக, திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கலையரங்கப் பகுதியைச் சுற்றி நீர் தேங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (20) மாலை பெய்த கனமழை காரணமாக, குறித்த பகுதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.
குறித்த கலையரங்க மண்டபம், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களைத் தங்க வைக்கும் இடைத்தங்கல் முகாமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்போது அந்த மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதி நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

Comments 0
Be the first to comment.