—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மொரட்டுவை துப்பாக்கிச் சூடு

மொரட்டுவை துப்பாக்கிச் சூடு

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொ**ன்றுவிட்டுத் தப்பியோடிய துப்பாக்கிதாரிகள் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிள், பிலியந்தலை, சித்தம்முல்ல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (20) இரவு 8.30 மணியளவில் சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதன் உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், T-56 ரகத் துப்பாக்கியால் ஹோட்டல் உரிமையாளரை இலக்கு வைத்துச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் காரைக் கைவிட்டுள்ளனர். பின்னர், வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை அச்சுறுத்தி, அவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள், சித்தம்முல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிதாரிகள் வந்த காரின் இலக்கத் தகடும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் விழுந்திருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.