7 மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் ஏழு மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘அம்பர்’ எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று புதன்கிழமை (21) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை வியாழக்கிழமை (22) அதிகாலை 1.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின்போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments 0
Be the first to comment.