தீபாவளி முற்பணம் ரூ.30,000 கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முற்பணமாக 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் (EFC) எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25,000 ரூபா வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வருடம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, முற்பணத் தொகையை 30,000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

Comments 0
Be the first to comment.