பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை

நாட்டுக்கு அருகில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் கொந்தளிப்பு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (20) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் நாளை (21) புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், தீவிர மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.